அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
ஷிப்ட்4 என்ற ஓன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜாரெட் ஈசாக்மேன் உள்ளார்.
இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் கூறும்போது, ஒரு நிறைவான வர்த்தக தலைவர், ஏழை பங்காளர், விமானி மற்றும் விண்வெளி வீரரான ஜாரெட் ஈசாக்மேனை நாசாவின் நிர்வாகியாக நியமிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாசா அமைப்பின் கண்டுபிடிப்பு மற்றும் உந்துதல், விண்வெளி அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளுக்கான வழிகளை ஏற்படுத்துவது மற்றும் கற்று கொள்வது ஆகியவற்றை ஜாரெட் வழி நடத்தி செல்வார் என கூறியுள்ளார்.