நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 238 கோடி அபராதம்!

Must read

அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு 238 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்துவதாக இன்போசிஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு H-1B தொழில் விசா பெறுவதற்கு பதில், B-1 பார்வையாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியதை அமெரிக்க குடிவரவு அமைப்பான ஐசிஇ கண்டுபிடித்தது.

நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனம் H-1B விசா பயன்படுத்தினால் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், குடிவரவு ஆகியவற்றில் அமெரிக்க சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.

ஆதலால் இன்போசிஸ் நிறுவனம் H-1B விசாவுக்கு பதில் B-1 பார்வையாளர் விசாக்களை பயன்படுத்தி ஊழியர்களை பணியாற்ற வைத்து குறைவான சம்பளம் கொடுத்துள்ளனர் என்பதை அமெரிக்க குடிவரவு அமைப்பான ஐசிஇ-ன் விசாரணையில் தெரிய வந்தது.

அதேவேளை பிரதமர் மோடி வாரத்திற்கு 100 மணிநேரம் பணியாற்றும்போது, அதற்கு ஏற்றபடி நாமும் கடின உழைப்பை செலுத்த வேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமே இலாபநோக்கத்திற்காக மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article