ஒரு காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, இன்று சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரானபோது, முழு நாடும் அவரைக் கொண்டாடியது.
ஆனால் இன்று, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகிய விடயங்கள், ட்ரூடோ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளன.
ட்ரூடோ பதவி விலகவேண்டும் என அவரது கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆளுங்கட்சி அமைச்சர்களில், நிதி அமைச்சரான கிறிஸ்டினா ப்ரீலேண்ட், வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraser ஆகியோர் தற்போதும் பதவி விலகியுள்ளனர்.
இதற்கிடையில், கனடா பொதுமக்கள் ட்ரூடோ மீதான கோபத்தை தொலைக்காட்சி நேரலையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதற்கமைய பிரதமரே, நீங்கள் கனடாவைக் கைவிட்டுவிட்டீர்கள், நீங்கள் நாட்டை நாசமாகிவிட்டீர்கள், பதவி விலகுங்கள் என நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கனேடிய மக்கள் கோபத்தை வௌிப்படுத்தியுள்ளனர்.
மேலும், உங்கள் தந்தையின் நேர்மை முதலான குணங்கள் உங்களிடம் கொஞ்சம் கூட இல்லை. உங்களைச் சுற்றி இருப்பவர்களே உங்களைக் கைவிடத் துவங்கியுள்ளார்கள் என்ற விமர்சனங்களும் முன்மைக்கப்படுகிறது.