பிக்பாஸ் குழுவில் ஒருவர் மரணம்! காரணம் என்ன?

Must read

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு தற்போது 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டாலும் அவர்களை கண்காணிக்கு நூற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ளன.

அதை நிர்வகிக்க தனி டீம், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் என அந்நிகழ்ச்சிக்கு பின்னால் 500க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வருபவர் தான் ஸ்ரீதர்.

இவர் நேற்று மாலை வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இந்த மரணச் செய்தி பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஸ்ரீதர் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? அல்லது ஏதேனும் கடன் பிரச்சனையா அல்லது வேலைப் பழு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீதரின் தற்கொலை முடிவு அவரின் குடும்பத்தை மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய பிக்பாஸ் குழுவையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article