பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
பங்களாதேஷில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் ஊடாக அவரது குடும்பத்தினர் 3.9 பில்லியன் பவுண்ட்கள் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய திறைசேரியின் பொருளாதார செயலாளராக நாட்டின் நிதிச் சந்தைகளில் ஊழலைக் கையாள்வதற்கான பொறுப்பை வகித்தபோது அவர்,
2013ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான ஒப்பந்தம் ஊடாக பங்களாதேஷின் அணுமின் நிலையமொன்றுக்கான செலவினை அதிகரிக்கப்படுத்தியதாக துலிப் சித்திக் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட துலிப் சித்திக்கின் உறவினரான ஷேக் ஹசீனா மீது பங்களாதேஷின் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நடத்திய விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் மற்றும் ஷேக் ஹசீனாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய அமைச்சர் துலிப் சித்திக் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.