பில் கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதி!

Must read

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் (Bill Clinton) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

78 வயதான பில் கிளிண்டன் உடல்நலக் குறைவு காரணமாக மெட்ஸ்டார் ஜோர்ஜ்டவுன் (MedStar Georgetown) பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1993 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின் 42 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய கிளிண்டன், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்.

இதன்படி பில் கிளிண்டன் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிறுநீரக நோய்த்தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் அவர் 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article