அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டும் கனடா தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் இணையம் மூலமான உலகளாவிய விளம்பர பிரசாரத்தை ஆரம்பிக்கிறது.
இந்த விளம்பரங்கள் ஸ்பானிய, உருது, உக்ரேனிய, இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை வெளிவரும் என்று கனேடிய குடிவரவுத்துறை ராய்ட்டர் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஏழு ஆண்டுகளில் இதே போன்ற விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்த செலவில் மூன்றில் ஒரு பகுதி தற்போதைய நான்கு மாத கால பிரசாரத்துக்கு செலவிடப்படுகிறது.
அதிக வீட்டு விலைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டப்படுகிறது.
கனடாவில் புகலிடம் கோருவது எளிதானதல்ல. அதில் தகுதி பெற கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ளன. வாழ்க்கையை மாற்றும் முடிவை எடுப்பதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை கண்டறிய வேண்டும்” என்று இவ்வாறான ஒரு விளம்பரம் கூறுகிறது