புங்குடுதீவு பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள் – கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை!

Must read

புங்குடுதீவு சித்தி விநாயகர் மஹா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் திருட்டு மாடுகளை இறைச்சிக்காக கொலை பண்ணுதல், கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரம் என்பன இடம்பெறுகின்றன. இது குறித்து குறிகட்டுவானில் இயங்கும் உப பொலிஸ் நிலையத்திற்கு பலதடவைகள் முறைப்பாடு செய்தும், அவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. பொலிஸாருக்கும், குறித்த குற்றச் செயல்களை செய்பவர்களுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

கசிப்பு வியாபாரத்தினால் மாணவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. பிள்ளைகளை தனியே பாடாசாலைக்கு அனுப்புவதற்கு பயமாக உள்ளது. பெண்கள் வீதியில் தனியாக நடமாடுவதற்கு பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது. எனவே இதற்கு உரிய அதிகாரிகள் ஒரு சிறந்த தீர்வு வழங்கு வேண்டும் என்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article