அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பபின் வரி அச்சுறுத்தலால், கனடா 1.3 பில்லியன் (கனடியன் டாலர்கள்) மதிப்புள்ள எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டம், அமெரிக்க-கனடா எல்லை பாதுகாப்பு மேம்பாடு, கண்காணிப்பு, புலனாய்வு மற்றும் முன்னேற்ற தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை முன்னிலைப்படுத்துகிறது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு நாய்கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சர்வதேச அமைப்புசாரா குற்றங்களை தடுக்க joint strike force உருவாக்கப்படும் என்பதுடன், நுழைவு சட்டங்களில் மாற்றங்களை செய்து, தவறான வாக்களிப்பு போன்ற பிரச்சினைகளில் ஆவணங்களை இரத்து செய்ய அல்லது நிறுத்த கனடிய அதிகாரிகளுக்கு அனுமதி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகலிட கோரிக்கைகளை துரிதமாகச் செயற்படுத்த புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும்.