இந்திய தலைநகர் புதுடில்லியில் இன்று ஒரேநாளில் 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் உள்ள பாடசாலைளுக்கு அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி ஒரேநாளில் 44 பாடசாலைளுக்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தாக கூறப்பட்டதோடு, பின்னர் விசாரணையில் இது வதந்தி என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை 16 பாடசாலைளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து வெடிகுண்டு பரிசோதனை செய்யும் குழுக்கள், தீயணைப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீஸார் மற்றும் மோப்ப நாய் சகிதமாக மூலமாக பாடசாலைளில் சோதனை நடைபெற்று வருகிறது.
அச்சுறுத்தலைத் தொடர்ந்து மாணவர்கள் யாரும் பாடசாலைளுக்கு வர வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.