பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சஸ்கட்ச்வான் முதல்வர் ஸ்கொட் மோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடிய மக்களின் உற்பத்திகள் மீது வரி விதிப்பது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்பது குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஓர் அரசாங்கம் நியமிக்கப்படுவது பொருத்தமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
கனடியர்கள் தங்களது தெரிவினை மேற்கொள்ளக்கூடிய ஒர் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் இதற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் ஸ்கொட் மோ தெரிவித்துள்ளார்.