கொழும்பு, பத்தரமுல்ல இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டமையினால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் காயமடைந்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் பொலிஸார் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உடனடியாக ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.