“போரை இப்போது நிறுத்த முடியாது, காசாவில் தாக்குதலை தொடர்வோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அறிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் இதுகுறித்து மேலும் கருத்துச் சொன்ன இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு,
நாங்கள் இப்போது போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம்.அவ்வாறு நடப்பதை நாங்கள் விரும்பவில்லை.
எனவே, போரை இப்போது நிறுத்த முடியாது. காசாவில் தாக்குதலை தொடர்வோம்.
ஹமாஸை அழித்தொழித்து அதன் இராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை முடக்குவதே இஸ்ரேலின் இலக்காகும். இருப்பினும், இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.