மயங்கி விழுந்த கைதி மரணம் – யாழில் சம்பவம்!

Must read

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை வழக்கொன்றுக்காக அழைத்துவரப்பட்ட, நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article