மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைப்பதாகவும், அந்த ஒற்றுமை இல்லாமையே தமிழ் தேசத்தில் பல மாற்றங்கள் உருவாக காரணமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை தொடர்ந்தால் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்ற சூழல் உருவாகும். எனவே, இனம் சார்ந்த விடுதலையைப் பெற்றுக்கொடுக்க ஒன்றிணைய வேண்டுடியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் வடக்கு – கிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்து பேசப்பட்டு வருவதாகவும் கூறினார்.