மீண்டும் பதவியேற்கவுள்ளதால் தள்ளுபடியானது டொனால்ட் ட்ரம்ப் மீதான வழக்குகள்

Must read

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக, பதவியேற்க உள்ள டிரம்ப் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் காணப்பட்டிருந்தன.

குறிப்பாக 2020 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சட்டத்தரணியூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒருவரிடம் விசாரணை நடத்த அமெரிக்க நீதித் துறைக் கொள்கை ரீதியில் அனுமதி இல்லை என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ட்ரம்ப் மீதான குற்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அண்மையில் ட்ரம்ப் மீதான அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களைச் சேமித்து வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article