முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம்

Must read

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வி அமைச்சும் (Ministry of Education) சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் களுத்துறை (Kalutara) மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடன் வழங்கும் வேலைத்திட்டம்
இதேவேளை சமுர்த்தி வங்கியின் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் வழங்கும் முதலாவது வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article