ஜனாதிபதி அநுரகுமார திசாயாயக்க அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஓரளவான புரிதலை கொண்டிருக்கிறது.
எனவே முப்பதுவருடங்கள் மோதிக்கொண்ட தமிழ் சிங்கள மக்கள் இனியும் மோதிக்கொள்ளாது தேசியத்துவத்தை ஏற்று வாழ வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய ஒற்றுமை வந்தால் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு அமைவாக, வளமான நாட்டில் அழகான வாழ்க்கை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.