மைத்திரிக்கு தற்காலிக தடை விதிப்பு!

Must read

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04.04.2024) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18ஆம் திகதி வரை தடையுத்தரவு

1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைவர் பதவியில் தொடர்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவு ஏப்ரல் 18ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article