யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குறித்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவித்தார்
எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியில் இருந்து வெளியேறுமாறும் இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இராணுவ முகாமிலிருந்து வெளியெற ஆரம்பித்துள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று பல அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கடந்த காலங்களில் போராட்டம் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்தக் காணியில் நில அளவைப் பணிகளை முன்னெடுப்பதற்கு பல முறை முயற்சித்த போதிலும் அதன்போது பெரும் முரண்பாடுகளுடன் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
மூவருக்குச் சொந்தமான காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.