யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழப்பு வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு!

Must read

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சத்திர சிகிச்சை
கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ் குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறே காரணம். இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து எனது சகோதரியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article