யாழ். வைத்தியசாலையில் பலருக்கு திடீர் சுகவீனம் – இன்றும் ஒருவர் உயிரிழந்தார்

Must read

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா, இதய அறைகளில் இரத்த கசிவு ஏற்பட்டுக் குறித்த மரணங்கள் சம்பவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன் அதன் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் அவர்கள் உயிரிழந்தமைக்கான நோய் காரணியைக் கண்டறிய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, 48 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் செல்லுமாறும் யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article