ரயிலுக்குள் இளம் பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற நபர் கைது!

Must read

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திலிருந்து புரூக்ளின் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலுக்குள் நித்திரையிலிருந்த இளம் பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரயிலுக்குள் நித்திரையிலிருந்த இளம்பெண் அருகில் சென்ற அந்த நபர், பெண்ணின் ஆடையில் தீ வைத்ததில், உடல் முழுவதும் தீப்பற்றியதால் இளம்பெண் அலறித் துடித்தார்.

அந்த இளம்பெண் இறக்கும் வரை தீ வைத்து எரித்த நபர் அங்கு நின்று இரசித்துக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், முன்விரோத தகராறில் இந்த கொலை நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article