ரொறன்ரோ அறக்கட்டளை மீது சைபர் தாக்குதல் 10 மில்லியன் டொலர் களவு

Must read

ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டாலர்கள் களவாடப்பட்டுள்ளன.

இந்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த ஏனையவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலாப நோக்கமற்ற வகையில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கினை ஊடறுத்து, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.

இவ்வாறு களவாடப்பட்ட பத்து மில்லியன் டாலர் பணம் கிரிப்டோ நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் கனடாவின் ஸ்கொட்டி வாங்கி பொறுப்பு சொல்ல வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையவழி கடவு சொல் போன்றவற்றை இந்த நிறுவனம் உரிய முறையில் பயன்படுத்தவில்லை எனவும் இதனால் இந்த திருட்டுச் சம்பவத்திற்கு பொறுப்பு சொல்ல முடியாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article