நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் இன்று (24) தமிழீழ தேசிய கொடிநாள் நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
1990ஆம் ஆண்டு கார்த்திகை 21 ஆம் நாள் எமது தேசிய கொடியை தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தி முதன்முதலாக ஏற்றி வைத்தார்.
எமது தேசியக்கொடி எமது இனத்தின் தனித்துவத்தின் ஒரு அடையாளமாக விளங்குகின்றது.
இதன் தனித்துவத்தையும் புனிதத்துவத்தையும் நிலைநிறுத்தி அடுத்த சந்ததியிடம் கையளிப்பது எமது கடமையென இதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வானது லண்டனில் இன்று பிற்பகல் 12 மணி தொடக்கம் 03 மணிவரை நடைபெற்றது. இதில் பெருமளவான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர்.