வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல்

Must read

ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (26.11.2024) இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்போது இயன்றளவு சுற்றாடல் பாதிப்புக்கள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சுற்றுலாசார் முதலீட்டுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

குறிப்பாக வனவளத் திணைக்களம் பிரதேச செயலர்கள், மாவட்டச் செயலர்கள் என எவருக்கும் தெரியாமல் காணிகளை தமது திணைக்களத்துக்குரியதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதனால் இந்த நிலைமை ஏற்படுவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன், வேலணை, வடமராட்சி கிழக்கு மற்றும் காரைநகர் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article