மொஸ்கோ மருத்துவமனை ஒன்றில் இருந்து கசிந்த தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடினால் வடகொரிய இராணுவம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அம்பலமாகியுள்ளது.
மொஸ்கோ மருத்துவமனை ஒன்றில் பணியாறும் தாதியொருவர் மற்றும் அவரது கணவர் இடையே நடந்த அலைபேசி உரையாடலை உக்ரைன் பாதுகாப்பு சேவை பதிவு செய்துள்ளது.
அதிலேயே, மொஸ்கோவின் பல மருத்துவமனைகள் தற்போது வடகொரிய இராணுவத்தினரால் நிரம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த உரையாடலில், இரண்டு நாட்களில் சுமார் 200 வடகொரிய வீரர்கள் தாம் பணியாற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த தாதி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மொழிப்பிரச்சனையும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், வடகொரிய வீரர்களிடம் ஆங்கிலத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.