வியட்நாமில், குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்ற சமூக அழுத்தத்தை பெண்கள் சமாளிக்க புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். திருமணத்துக்கான அழுத்தத்தை எதிர்கொண்டு, இளம் பெண்கள் தங்களுக்குப் பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த நடைமுறை, பெற்றோர்கள் தங்கள் மகள்களை திருமணத்திற்கு வற்புறுத்துவதனால் உருவாகியுள்ளது. 30 வயதான வடக்கு வியட்நாமைச் சேர்ந்த ஒரு பெண், பெற்றோர்கள் காதலனை வீட்டிற்கு அழைத்து வரக் கூறியதையடுத்து, வாடகைக்கு காதலனை எடுத்துள்ளார். இதேபோல், பல பெண்கள் இதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
ஒரு 25 வயதான “போலி காதலன்” கூறும்போது, “ஒரு வருடமாக இந்த வேலையைச் செய்யும் பணியில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக, ஜிம்மிற்கு செல்வது, சமைக்க கற்றுக்கொள்வது, பாடம் மற்றும் உரையாடல் திறன்களை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தி, தனது தோற்றம் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.