ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர், விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் முக்கிய பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் அமரசூரிய தானே பல்பொருள் அங்காடிக்கு சென்றதாகவும், ஜனாதிபதி திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நிதியமைச்சுக்கு நடைபயணமாக சென்றதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
நாடு ஒரு கடுமையான இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் பிரதமர், தமது நேரத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி திஸாநாயக்க, நடைபயிற்சி மூலம் எதனையும் செய்ய வேண்டியதில்லை, அவர் உலங்கு வானூர்தியை பயன்படுத்தி கூட தனது நேரத்தை நிர்வகிக்க வேண்டும் என்று நளின் குறிப்பிட்டுள்ளார்.