வைத்தியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – கியூபெக் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

Must read

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென
கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாகாணத்தினால் பயிற்றுவிக்கப்படும் மருத்துவர்கள் தங்களது முதல் ஐந்து ஆண்டு கால பகுதி சேவையை, கியூபெக் பொதுச் சுகாதார வலயத்துக்குள் வழங்கத் தவறினால் குறித்த அபராதம் விதிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இதன்படி குறித்த நிபந்தனையை மீறினால், மருத்துவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் டாலர் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கால நிபந்தனையை பூர்த்தி செய்ய முன்னதாக தனியார் துறையில் அல்லது மாகாணத்திற்கு வெளியில் மருத்துவ சேவையை வழங்கினால் அவர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிள்ளார்.

புதிய மருத்துவர் ஒருவரை பயிற்றுவிப்பதற்காக நான்கரை லட்சமும் ​டொலர்களையும் அவர்களின் வதிவிட வசதிக்காக 8 லட்சம் டொலர்களையும் மாகாண அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாலேயே இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

எனவே, மக்கள் பணத்தை கொண்டு கற்றவர்கள் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டியது அத்தியாவசியமானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article