13 வயது சிறுமி உள்ளிட்ட பதின்ம வயது நால்வருக்கு எதிராக கார்கடத்தல் குற்றச்சாட்டு! பீல் பொலிசார்

Must read

பிரம்டன் பிரதேசத்தில் கார்கடத்தில் ஈடுபட்டதாக இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட பதின்ம வயதுடைய நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பீல் பொலிசார் தெரிவித்தனர்.

Goreway Drive மற்கும் Queen Street East பகுதியில் இந்த கார் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றள்ளது.

இதில் இருவர் கார் உரிமையாளரை தாக்கியதாகவும், பாதிக்கப்பட்ட நபர் மயங்கிவிழுந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி, பணப் பை, வாகனம் ஆகியவற்றை குறித்த சிறுவர்கள் கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொள்ளையிடப்பட்ட வாகனம் Caledon பிரதேசத்தின் Kennedy வீதி மற்றும் Twistleton தெரு பிரதேசத்தில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

13 மற்றும் 14 வயது சிறுமி இருவரும், 16 மற்றும் 17 சிறுவர் இருவர் இந்த கார் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் குற்றவியல் சட்ட விதிகளின் படி சந்தேக நபர்கள் எவரையும் அடையாள காண முடியவில்லை என்று பொலிசார் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article