உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வடக்கில் கிராமங்களை நோக்கிய திட்டங்கள் முன் வைக்கப்பட்டு அவற்றுக்காக நிதி ஒதுக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதே எமது நோக்காகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விசேடமாக கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கடந்த கால குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.