கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயக்கரை பகுதியில் 18 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதென சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்வதால், மேகக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளதாகவும் அவர் கூறினார்,
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
அதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.