ஒன்டாரியோ பிராந்திய போலீசார் (OPP), மிஸ்சிசாகாவில் 401 பேருந்து நெடுஞ்சாலையில் வாகனங்களை நோக்கி துப்பாக்கி சூடு செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதான நபரைத் தேடி வருகின்றனர்.
செவ்வாய் காலை 5 மணியளவில், டிக்சி சாலைக்கு அருகே கிழக்கு திசை பாதையில் இந்த சம்பவம் நடந்தது. 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் துப்பாக்கிச் சுட்டதால் அவை சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில், குற்றவாளி ஒரு வாகனத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். எனினும், குறித்த வாகனத்தை வேறொரு இடத்தில் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த நபரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாகவும், இந்த நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.