50 ஆண்டுகளின் பின் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்!

Must read

50 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அவசர நிலை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய ஜனாதிபதி யூன் சாக் யோல், நாட்டில் வட.கொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 எம்.பி.க்கள் வாக்களித்தனர். அதில் ஆளும் கட்சி எம்.பிக்களும் இருந்தமை குறிப்படத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்கொரிய நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய நிலையில் உடனடியாக அங்கு இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டதால் இராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தது.

இதனையடுத்து அதிபரின் இந்த அவசரநிலை அறிவிப்பு செல்லாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் வூன் வொன் சிக் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்கள் பலரும் ஆராவாரம் செய்து கொண்டாடினர்.

இந்த அவசரநிலை பிரகடன விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து ஜனாதிபதி யூன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இருப்பினும் தென்கொரிய ஜனாதிபதியின் தரப்பிலிருந்து அதுகுறித்து எவ்வித பதில்களும் வௌியிடப்படவில்லை.

முன்னதாக தென் கொரியாவை 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பார்க் சங் ஹீ 1979 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டபோது அந்நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 50 வருடங்களுக்கு பின்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் அது ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article