புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கான அறிவிப்பு!

Must read

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதாலேயே 36 வீத விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் 17 வீதமானோர் கண் பாதிப்புகளுக்கு ஆளாவதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

அதன்படி, பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு மற்றும் வீதி பாதுகாப்பு தேசிய சபை ஆகியன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க, நேருக்கு நேராக முச்சக்கர வண்டிகள் மோதிக்கொள்வதால் இடம்பெறும் விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article