இலங்கையில் இலங்கையில் இருந்து பிரான்ஸ் சென்று மோசமான செயலில் ஈடுபடும் காவாலிகள்

Must read

இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்ற பல தமிழ்க் காவாலிகள், அங்கு வேலை செய்யாது ‘சோசல் காசு’ என கூறப்படும் அரசினால் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும் இடையூறு செய்து வருவதாகத் தெரியவருகின்றது.\

மேலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் இலங்கையில் இருக்கும் தமது நண்பர்களான காவாலிகளைத் தொடர்பு கொண்டு அக் காவாலிகள் மூலம் இலங்கையில் கூலிக்கு வீடு எரித்தல், தாக்குதல், பெற்றோல் குண்டு வீசுதல் போன்ற செயற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் காவாலித்தனம் செய்த பல தமிழ்க் காவாலிகள் பொலிஸாரால் சுற்றி வளைத்துப் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் குறித்த காவாலிகள் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் சூழ்நிலை ஏற்படும் என அங்குள்ள தமிழர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article