ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்தார்.
மூன்று நாடுகள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ஆப்ரிக்கநாடான நைஜிரியா சென்று அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்துப் பேசினார்.
பின்னர் இன்று திங்கட்கிழமை (18) பிரேசில் சென்றடைந்தார். அங்கு ரியோடிஜெனிரோ நகரில் நவ.18 மற்றும் நவ. 19 என இரு நாட்கள் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார். அப்போது உங்களை சந்தித்தில் எனக்கு மகிழ்ச்சி என மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.