இலங்கைத் தமிழரினால் கனடாவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Must read

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு கனடிய அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் கனடிய குடிவரவு குடி அகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணம் காரை நகரை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு புதிய கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த நபர் தொடர்பில் விசாரணை செய்த போது அவரிடம் புதிய கடவுச்சீட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டவிரவாத ஆட்கடத்தல் வலைக்கமைப்பிற்கு குறித்த நபர் தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இலங்கையர்களை கனடாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடர்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை குறித்த நபர் ஒப்புக்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது கால்களுக்கு இலத்திரன்கள் பிரேஸ்லெட் ஒன்று போடப்பட்டு கடுமையான நிபந்தனை அடிப்படையில் வீட்டில் வசிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குறித்த நபருக்கு தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே தேசிங்குராசன் விடுதலை செய்யப்பட்டார்.

புதிய கடவுச்சீட்டு விண்ணப்பம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இலங்கையர் ஒருவரை அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு அழைத்து வந்த குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு 15 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் அவர் தொடர்ந்தும் அதே குற்ற செயலில் ஈடுபட்டு வந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மே மாதம் மீண்டும் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article