கனடா முழுவதும் தபால் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 85,000 கடவுச்சீட்டுகள் அனுப்பப்படாமல் தேக்கத்தில் உள்ளன.
கடவுச் சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
கனடா தபால் பணியாளர் சங்கத்தின் வேலைநிறுத்தத்திற்குள் சிக்கல்களைத் தவிர்க்கும் முயற்சியாக, Service Canada நவம்பர் 8ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்களை அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்தியது.
இந்த முடிவு, தபால் நிலையங்களில் கடவுச் சீட்டுக்கள் தேங்கிக் கிடப்பதைத் தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடவுச்சீட்டுக்கள் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசரமாக கடவுச்சீட்டுக்களைப் பெற வேண்டுமாயின் 1-800-567-6868 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம் என்றும் அல்லது Service Canada மையங்களில் நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தின் பின்னணி
கனடா தபால் நிறுவனத்தின் 55,000 மேற்பட்ட பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தபால் சேவைகள் முடங்கியுள்ளன. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் தபால் நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்கு மத்திய அரசு சிறப்பு குழுவொன்றை நியமித்துள்ளது.
தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள்
4 ஆண்டுகளுக்கு 24% சம்பள உயர்வு (தபால் நிறுவனத்தின் 11.5% நிபந்தனைக்கு எதிராக). வேலை நிலைத்தன்மை, நலவசதிகள் உறுதிசெய்ய வேண்டும் வார இறுதி நேரத்தில் பொதிகள் விநியோக ஒப்பந்தங்களை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கம் முன்வைத்துள்ளது.
பரவலான பாதிப்புகள்
தபால் பணியாளர்களின் இந்த வேலைநிறுத்தம் சிறிய தொழில் நிறுவனங்கள், நன்கொடைகள், பிரதேச மக்கள் சேவைகள் ஆகியவற்றை கடுமையாக பாதித்துள்ளன. இதனால், Service Canada வழங்கும் வேலைவாய்ப்பு காப்பீடு மற்றும் சமூகக் காப்புறுதி எண்ணிக்கை போன்ற சேவைகளும் தாமதமடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பயணக்காரர்களுக்கு அறிவுரை
அடுத்த 6 வாரங்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்களுக்கு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள Service Canada மையங்களில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அவசர பயணத்திற்கான விண்ணப்பங்கள் கூரியர் வழியாக அனுப்பிவைக்கவும் அல்லது நேரடியாக சேவை மையங்களில் கையளிக்கும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் பணியாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து அரசாங்கம் கண்காணித்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்க துரிதமான தீர்வை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மூலம்: Global News