பிரதான வீதிகளில் சைக்கிள் பாதைகளை அனுமதிக்கும் நகராட்சிக்குள்ள அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குஃரிய சட்டமூலத்தை ஒன்டாரியோ மாகாணத்தின் கன்சர்வேடிவ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
குயின்ஸ் பார்க் சட்டசபையில் திங்கட்கிழமை நடந்த மூன்றாவது வாக்கெடுப்பில் 66இற்கு 27 என்ற வாக்குகளுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின்படி, பிரதான வீதிகளில் புதிய சைக்கிள் ஒழுங்குகளை அமைக்க அல்லது அகற்ற, நகராட்சி மன்றங்கள், மாகாண அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.