கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதாக உறுதியளித்து, இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்க உள்ள டிரம்ப், தனது முதல் உத்தரவுகளில் ஒன்றாக கனடா மற்றும் மெக்சிக்சோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியை விதிப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் திறந்துவிடப்பட்டிருக்கும் அமெரிக்கா எல்லைகள் மூடப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவுக்கு விதிக்கப்படும் தற்போதைய வரிகளில் மேலாக 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கனடாவின் வர்த்தகம் அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையில், கனடாவின் ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் ஏற்றுமதிகளில் 75% அமெரிக்காவுக்குவிற்கு கடந்த ஆண்டு சென்றிருந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா – கனடா வர்த்தக உறவுகள் குறித்து டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.