கனடாவின் ஸ்காப்ரோ – Markham Road and McNicoll சந்தியில் அமைந்துள்ள Majestic City தமிழ் வர்த்தகத் தொகுதியில் உள்ள கடையொன்றில் கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தச்ச ம்பவம் நடந்துள்ளது.
குறித்த வர்த்தகத் தொகுதியில் முகூர்த்தம் என்ற நகையகத்தை இலக்கு வைத்து இந்த கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், நகையகத்திற்குப் பதிலாக அருகில் இருந்த பூக்கடையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், நகையகத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் உடனடியாக பொலிசார் சம்பவத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
அண்மைக்காலமாக ஸ்காப்ரோவில் நகையகங்களை இலக்குவைத்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கி வருகின்றன.