கேமரூனின் லோகோநெட் – சாரி பகுதியில் உள்ள டாராக் தீவிலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற படகு நடுகடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் 20 பேர் நீரில் மூழ்கி பலியான நிலையில் மேலும் பலர் நீரில் மூழ்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் நீரில் மூழ்கியவர்களை தேடி வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.