தமிழகத்தின் புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார்.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதி கனமழை பெய்தது.
ருத்ரதாண்டவம் ஆடிய பெஞ்சல் புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் கண மழை ஏற்பட்டது.
குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில், சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடைக்கால நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.