இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 6 – 2024 வெள்ளிக்கிழமை

Must read

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 06.12.2024

சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 11.14 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று மாலை 04.50 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

திருவாதிரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களே… கல்வியில் திறமையை அதிகரிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெற்று பிரகாசிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். பங்குதாரர்களுடன் பக்குவமாகப் பேசி தொழிலை நிலை நிறுத்துவீர்கள். அரசு வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.

அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்

எந்தக் காரியத்திலும் நன்கு யோசித்து இறங்குவீர்கள். குடும்பம் பற்றிய கவலையால் மன வேதனைப்படுவீர்கள். உறவினர்கள் கொடுக்கும் தொல்லையால் டென்ஷன் ஆவீர்கள். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். படிப்பில் வெற்றிபெற திட்டமிட்டு மாணவர்கள் கல்வி கற்பீர்கள். எதிர்பார்த்த பண உதவியை சுனக்கமில்லாமல் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்

எல்லாம் தெரியும் என்ற நினைப்பை மூட்டைகட்டி வையுங்கள். கைமாற்றாக பணம் கொடுப்பதைத் தவிருங்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடாதீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் விசனப்படுவீர்கள். அனாவசியமான செலவுகளால் கடன் வாங்குவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களில் தொந்தரவை சந்திப்பீர்கள். சந்திராஷ்டம நாள்.

3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்

நயந்து பேசி நண்பரின் திருமணத்தை நல்ல விதமாக முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே பாசத்தை அதிகரிப்பீர்கள். புதிய வீடு வாங்க திட்டம் தீட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைப்பீர்கள். கணிசமான லாபத்தை கமிஷன் வியாபாரத்தில் பெறுவீர்கள். வாங்கிய கடனை அசலும் வட்டியும் செலுத்தி அடைப்பீர்கள்.சந்திராஷ்டம நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.

அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்

மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் வேலையில் சாதகமான பலனை அடைவீர்கள். கடுமையான போராட்டத்தில் தொழிலை நடத்துவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்பீர்கள். மேலதிகாரிகளின் டார்ச்சரால் வேலையில் கவனச் சிதறலை அடைவீர்கள். பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்தால் பண இழப்புக்கு ஆளாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.

அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி

பொறுமையாக இருந்து பூர்வீகச் சொத்தை அடைவீர்கள். தொழிலில் வேகம் காட்டி போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக பணம் சேர்ப்பீர்கள். உறவினர்கள் வகையில் உதவிகளை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவீர்கள். வெளியூரிலிருந்து வியாபாரத்திற்கான புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். வீட்டில் மங்கல காரியங்கள் நடத்துவீர்கள்.

6 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்

நீண்டகாலமாக நினைத்திருந்த இடத்தை வாங்கி பத்திரம் போடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் பெறுவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். தேவைக்கான பணத்தை எந்த வகையிலயாவது பெறுவீர்கள். கார் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.

அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்

போட்டிகள் அதிகரித்து வியாபாரத்தில் சிக்கலை சந்திப்பீர்கள். வேலையைக் கெடுக்க, கூட இருப்பவர்களே குழி பறிப்பார்கள். சிறு வியாபாரிகள் ஏதாவது ஒரு இடையூறால் சிரமப்படுவீர்கள். மனைவியின் மனமறிந்து நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவீர்கள். வரவுக்கு மேல் வரும் செலவால் விழி பிதுங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.

அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு

வழக்கறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள் முத்திரை பதிப்பீர்கள். வியாபாரத்தில் காட்டும் வேகத்தால் லாபத்தை கூட்டுவீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். சாதுர்யமாகவும் நயமாகவும் நடந்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனை நீங்கி நிம்மதி அடைவீர்கள். வெளிநாட்டுப் பயண ஏற்பாடுகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.

அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்

சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறந்தால் சங்கடங்களை சந்திக்க மாட்டீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைத் தவறாகப் புரிந்து கொள்வதால் வேதனை அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகள் வந்து சிரமப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சளி இருமல் தொல்லைக்காக மருத்துவரை பார்ப்பீர்கள்.

கும்பம்

அரசாங்க வேலைகள் இழுபறியாக நடந்து அலைச்சலால் அவதிப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சுணக்க நிலையை காண்பீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யப்போய் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் பொருள் விரயமடைவீர்கள். வியாபாரத்தில் தொய்வு நிலையை காண்பீர்கள். பார்ட்னர்களிடையே பணப் பிரச்சனையால் உங்கள் பங்கை உடனடியாக கேட்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்

நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறுவதால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகமான வருமானம் அடைவீர்கள். வியாபாரத்தில் காதலியையும் கூட்டு சேர்த்துக் கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவியை வெளிநாட்டில் இருந்து பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.

அதிர்ஷ்ட எண்: 3 8 5

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article