கனடாவின் ஸ்வோ ஸ்கோஷியா மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் அறுபதாயிரம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் தடைப்பட்டதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சில இடங்களில் விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.