சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் கனடாவின் மாகாண மத்திய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று ஒன்றோரியோவின வீட்டுவாரிய துணை அமைச்சர் விஜேய் தனிகாசலம் தெரிவித்தார்.
கனடாவில் நடக்கும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான சட்டவிரோத துப்பாக்கிகள் அமெரிக்க எல்லைப் பகுதி ஊடாக சட்டவிரோதமாக கடத்தப்பட்டவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு மாகாண, மத்திய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
கனடாவில் நடந்துவரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவது, மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒன்றோரியோவின வீட்டுவாரிய துணை அமைச்சர் விஜேய் தனிகாசலம் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக தற்போது அதிகரித்துள்ள கார்க் கொள்ளைச் சம்பவங்களை எவ்வாறு தடுப்பது, அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த பொலிசார் அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.
சமூக பாதுகாப்பு குறித்து இந்த அரசாங்கம் அதிக அக்கறைக் கொண்டுள்ளதாகவும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்குத் தேவையான சட்டமைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், சமூக பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் துணை அமைச்சர் விஜேய் தனிகாசம் உள்ளிட்ட தரப்பினர் விளக்கமளித்தனர்.