கனடா, அமெரிக்க மாகாணமாகவேண்டும் என கனடா மக்கள் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆகவேண்டும் என கனேடியர்கள் பலர் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால், அவர்களுக்கு மிக அதிக அளவிலான வரிகள் மிச்சமாவதுடன், இராணுவ பாதுகாப்பும் கிடைக்கும் என்றும், கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்பது ஒரு மிகச்சிறந்த ஐடியா என தான் கருதுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.