ஜெய்ப்பூரில் எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

Must read

இந்தியா – ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (20) காலை எரிவாயு நிரப்பு நிலையத்திற்கு இரசாயனம் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மற்றுமொரு வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 37 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து ஜெய்ப்பூர் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article